national award actress death for shooting spot

தேசிய விருது பெற்ற கன்னட நடிகை பத்ம குமுதா, பல கன்னட படங்களில் நடித்து வருகிறார் மேலும் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தொலைக்காட்சி தொடரின் ஷூட்டிங்கின் போது தீடீர் என மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். இது கன்னட சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

58 வயதான அவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மரணத்திற்கு கன்னட திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.