நாச்சியார்

கடந்த சில நாட்களுக்கு முன் பாலா இயக்கத்தில் ஜோதிகா ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பலர் நடித்த படம் நாச்சியார். பாலாவின் பி.ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

விமர்சனம்

இந்த படம் வருவதற்கு முன்பே பல விமர்சனங்களை பெற்றது.முதலில் ஜோதிகா பேசிய வசனம் கடும் சர்ச்சையை சந்தித்தது. நெட்டிசன்கள் நீங்கள் போய் இப்படி பட்ட வார்த்தையை பேசலாமா என்று கருத்து பதிவிட்டனர். இதற்கு ஜோதிகாவோ இந்த வசனத்தை பல ஆண்கள் பேசியிருக்கின்றனர்.ஒரு பெண் பேசியதால் விவாதப்பொருளாக பார்க்கப்படுகிறது என்று விளக்கமளித்தார்.

பாராட்டு

அதன் பிறகு மற்றொரு டீசரில் அனைத்து மதங்களும் பாடல்களும் பின்னே ஒலிக்க ஜோதிகா மீண்டும் கோயிலும் குப்பை மேடும் ஒன்றுதான் என்று பேசினார்.இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.இந்நிலையில் படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ளது.மேலும் இதில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டை பெற்றுத் தந்துள்ளது.

மென்மை

வழக்கமாக பாலா படம் என்றாலே கிளைமேக்சில் நாம் ஒருவிதமான மன அழுத்தத்துடன் தான் வெளியில் வருவோம்.ஆனால் இந்த படமோ முற்றிலும் மாறுபட்ட வகையில் மிகவும் மென்மையாக இருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.

சூர்யா

இந்நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் பார்ட்டி சில நாட்களுக்கு முன் ரகசியமாக நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்து கொண்டார்