இதனையடுத்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 'D 40' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இந்தப் படத்தின் ஷுட்டிங், ஜனவரி மாதத்துடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'D 40' படத்தை முடித்தக் கையோடு, பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். 

திருநெல்வேலி மண்வாசனைக் கதையுடன் உருவாகும் இந்தப் படத்திற்கு கர்ணன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
மாரி செல்வராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக  நடிக்க ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தொடர்ந்து, படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடராஜும் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் நட்டி இணைந்து நடித்த 'நம்ம வீட்டுப் பிள்ளை' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.