'விஸ்வாசம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சமூக கருத்து கொண்ட 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர் தயாரிக்க உள்ளார். இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார்.

இந்த படம் குறித்த தகவல் ஆனபோது வெளியாகி வந்த நிலையில்...  நடிகை நஸ்ரியா இப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இதனை உறுதி படுத்தும் வகையில் நஸ்ரியா, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகள் போட்டிருந்தார். மேலும் இந்த படத்தில் ஸ்வேதா என்கிற கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

ஆனால் என்ன ஆனது என தெரியவில்லை?  தற்போது, இந்த படம் குறித்து பேசியுள்ள படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நஸ்ரியா மற்றும் கல்யாணி நடிப்பதாக கூறப்பட்ட தகவலை முழுமையாக மறுத்துள்ளார். இதனால் ஒரு வேலை நஸ்ரியா இந்த படத்தில் இருந்து வெளியேறி இருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.  பாலிவுட் நடிகை வித்யா பாலன் அஜித்தின் ஜோடியாக நடிக்கிறார் என தெரிவித்துள்ளார். அதே போல் பிங்க் படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தரிங் மற்றும் அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோரும் தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.