தல அஜித் 'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து 59-வது படத்தை, 'சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய,  இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியடைந்த பிங்க் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட, உள்ளதாக ஏற்கனவே அதிகார பூர்வமாக  அறிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து இந்த படத்தை பற்றி பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட திருமணத்திற்கு பின்,  தமிழில் நடிகை நஸ்ரியா இந்த படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆக உள்ளார் என தகவல் வெளியானது.

ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், இது உண்மையா? வதந்தியா? என்பது போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதனை தெளிவு படுத்தும் வகையில் நடிகை நஸ்ரியா அவருடைய ட்விட்டர் பக்கத்தில், தல 59 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்ததோடு அவருடைய  கேரக்டர் பெயர் ஸ்வேதா என்றும் கூறியுள்ளார்.

இதனால், அஜித் ரசிகர்கள் மற்றும் இன்றி  நஸ்ரியாவின் ரசிகர்களையும் இந்த செய்தி குஷிபடுத்தியுள்ளது.  இந்த படத்தை மறைந்த, பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது