பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா, உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக, அவருடைய மகன், ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

1967 ஆம் ஆண்டு, ஒரு சிறிய வேடத்தில், 'அமன்' என்கிற படத்தில் நடிக்க துவங்கியவர் நடிகர் நஸ்ருதீன் ஷா. ஓரிரு படங்களிலேயே இவரின் நடிப்பு திறன் வெளிவந்ததால், பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக மாறினார்.

இதுவரை, இந்தியில் மட்டும் 100க்கும் அதிகமான படங்களில் நடித்து, சிறந்த நடிகருக்கான பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். குறிப்பாக 3 முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.

நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட, 'டர்ட்டி பிச்சர்' படத்தில், வித்தியா பாலனுக்கே சவால் விடுவது போல் நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தார் நஸ்ருதீன் ஷா. இந்த திரைப்படம் இவரை, கோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகியது.

இந்நிலையில் இவருக்கு திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, பாலிவுட் திரையுலகில் ஒரு வதந்தி வேகமாக பரவியது. இதற்க்கு அவருடைய மகன் இந்த தகவல் உண்மை இல்லை என மறுத்துள்ளார்.

இந்த வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ள அவர், தன்னுடைய தந்தை நலமாக உள்ளதாகவும், ஊரடங்கின் காரணமாக அவர் ஓய்வில் உள்ளார் என தெரிவித்துள்ளார். 

இதே போல் சமீபத்தில் கூட, நஸ்ருதீன் ஷா, இந்த ஊரடங்கு ஓய்வில், ஷேக்ஸ்பியரின் கதைகளை படித்து வருவத்திகாக தெரிவித்தது மட்டும் இன்றி, நிறைய படங்களை பார்ப்பதாகவும், சமையல் செய்ய உதவி வருவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.