நானி - மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது!
'சீதா ராமம்' பட நடிகை மிருணாள் தாகூர், நடிகர் நானிக்கு ஜோடியாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில், மோகன் செருக்கூரி மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பில், ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'hi நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ளது. நானியின் 30வது படமான 'hi நான்னா' தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது படக்குழு வெளியிட படத்தின் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
போட்ரா வெடிய... இசை நிகழ்ச்சியில் ஒன்றினையும் யுவன் - சிம்பு! எங்கு.. எப்போது தெரியுமா?
தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்ட நேர்மறையான குடும்பத் திரைப்படமாக இது இருக்கும் என்பது ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தாலே தெரிகிறது. தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 'hi நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இந்தியில் மட்டும் 'hi பப்பா' என டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நானியின் தோள்களில் அமர்ந்திருக்கும் குழந்தை அவருக்கு பின்னால் நிற்கும் மிருணாலுக்கு பிளையிங் கிஸ் கொடுப்பது போல் உள்ளது.
விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகிறாரா தேவயானியின் மகள் இனியா? வெளிப்படையாக தன் ஆசையை கூறிய இயக்குனர்!
மிகவும் விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த படத்திற்கு, ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார், சானு ஜான் வர்கீஸ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளர். அப்பா-மகள் பாசத்தை வெளிப்படுத்தும் அழகிய காவியமாக உருவாகும் இந்த படம் இவ்வருடம் டிசம்பர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.