Asianet News TamilAsianet News Tamil

Suryavin Sanikizhamai: நானி நடிக்கும் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

நேச்சுரல் ஸ்டார் நானி,  விவேக் ஆத்ரேயா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணையும் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் படப்பிடிப்பு அதிரடியான ஆக்சன் காட்சியுடன் துவங்கியது.
 

nani acting suriyavin sanikizhamai shooting begin with action episode mma
Author
First Published Nov 15, 2023, 6:57 PM IST | Last Updated Nov 15, 2023, 6:57 PM IST

நேச்சுரல் ஸ்டார் நானி,  விவேக் ஆத்ரேயா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் மூவரும் இணையும் இரண்டாவது படைப்பான சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படத்திற்கு கடந்த மாதம் பூஜை போடப்பட்டது.  நேச்சுரல் ஸ்டார் நானியை தனித்துவமான அதிரடி அவதாரத்தில் நடித்துள்ள இப்படத்தின் அறிமுக அறிவிப்பு வீடியோ, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.   DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் DVV தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இருவரும் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார்கள். 

nani acting suriyavin sanikizhamai shooting begin with action episode mma

என் அண்ணன் குடியால சாகல! நடந்தது இது தான்... 10 வருஷத்துக்கு பின் நடிகர் மணிவண்ணன் தங்கை கூறிய ஷாக் தகவல்!

இப்படத்தின் படப்பிடிப்பு அதிரடி ஆக்சன் காட்சியுடன் இன்று ஹைதராபாத்தில்  தொடங்கியது. ராம்-லக்ஷ்மண் மாஸ்டர்கள் சாகச சண்டைக்காட்சியை வடிவமைக்கிறார்கள். இந்த ஷெட்யூலில் ஆக்ஷனுடன் சில வசன காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. இப்படப்பிடிப்பில் நாயகன் நானி மற்றும் படத்தின் முக்கிய கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

nani acting suriyavin sanikizhamai shooting begin with action episode mma

நடிகை பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில், நானி வித்தியாசமான முரட்டுத் தோற்றத்தில் நடிக்கிறார், மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். புகழ்மிகு  இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this linkhttps://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios