nana patnekar love the actress manisha koiraala

கருப்பு 'காலா' விற்கு வெள்ளை 'ஹரிதாஸ்சாக' வந்து செம டஃப் கொடுத்து நடித்துள்ளவர் நடிகர் நானா படேக்கர். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ள இவர் தற்போது ரஜினி மற்றும் கமலுடன் நடித்த பிரபல நடிகையை காதலித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

'அக்னி சாக்ஷி' மற்றும் 'காமேஷி' திரைப்படங்களில் நானா படேகரும், நடிகை மனிஷா கொய்ராலாவும் ஒன்றாக நடித்தனர். அந்த சமயங்களில் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதனை இருவருமே மறுக்கவில்லை. அதே சமயம் அது உண்மையான தகவல் என்று உறுதிப்படுத்தவும் இல்லை. 

ஏனெனில் இவர்களது காதல் பாதியிலியே முறிந்துவிட்டதாக, பாலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது நானா படேகரின் கோபம் தான். 

இவருக்கு எந்த அளவிற்கு கோவம் வரும் என்றால், பாலிவுட் திரையுலகில் இவரை 'ஆங்கிரி மேன்' என்று தான் அழைப்பார்கள் பார்த்துக்கொள்ளுங்கள். பெரிய இயக்குனரின் படம் என்றாலும் இவரை வைத்து படம் எடுத்தால் நானாவின் பிடிக்கு அவர் தான் வளைந்து கொடுத்து போக வேண்டும். 

மேலும், 'காலா' படால் வெளியீட்டு நிகழ்ச்சியில், நானாவை பற்றி பெருமையாக பேசிய ரஜினி. அதே சமையம் இவரை கையாளுவது மிகவும் கடினம் என கூறியிருந்தார். ஆனால் ஆவாரை இயக்குனர் ரஞ்சித் கச்சித்தமாக கையாண்டிருக்கிறார் . 'காலா' வில் வில்லனாக அவர் நடிக்க தயாரானதும், எனக்கும் மஜாவாகிவிட்டது. 'வா ஒரு கை பார்த்து விடலாம் என்ற குஷியில் நடித்ததாக கூறி இருந்தார்.