'சயனம்' என்கிற மலையாள திரைப்படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று கதாநாயகியாக நடித்து கொண்டிருப்பவர் பிரபல மலையாள நடிகை ரம்யா நம்பீசன். 

நடிகை என்பதையும் தாண்டி, சிறந்த தொகுப்பாளராகவும், பாடகியாகவும் மலையாள ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். மேலும் தமிழில் 'குள்ளநரி கூட்டம்' , 'பீசா', 'டமால் டுமீல்' ,' சத்யா' , 'சேதுபதி' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். 

திரையுலகில் இவருடைய பங்கு நடிப்பையும் தாண்டி, நடிகைகளுக்கு எதிராக நடைபெறும், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில் அதிகம் என கூறலாம். இவர் சமீப காலங்களாக தமிழில் மட்டுமே ஒரு சில படங்கள் நடித்து வந்தாலும், மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை. 

இது குறித்து, முதல் முறையாக கூறியுள்ள நடிகை ரம்யா நம்பீசன்.. மலையாள சினிமாவில்  உள்ள பெண்களுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

"இப்படி பெண்களுக்கு எதிராக சினிமா துறையில் நடக்கும் விஷயங்கள் பற்றி தொடர்ந்து நாள் கேள்வி கேட்டதால் எனக்கு நான்கு ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் இல்லை" என அதிர்ச்சி காரணத்தை கூறியுள்ளார்.