namitha today leave big boss house

பிக் பாஸ் போட்டியின் விதிப்படி ஒருவர், என்னால் இங்கு இருக்க முடியாது என அவருடைய தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறலாம். அல்லது உடல் நலம் சரி இல்லாமல் போனால் அவர் இந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர். 

இல்லையெனில் வாரம் தோறும் போட்டியாளர்களால் நாமினேஷன் செய்யப்பட்டு, ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பது விதிமுறை.

ஏற்கனவே கடந்த வாரத்தில், நடிகர் ஸ்ரீ உடல் நலம் இல்லாத காரணத்தால் வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு நடிகை அனுயாவும் கடந்த வாரமே வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இந்த வாரமும் இரண்டு பேர் பிக் பாஸ் அறையை விட்டு வெளியேறுவார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம் இன்றைய பிரோமோவில் நடிகை நமிதா சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வெளியேற போவதாக கூறி தன்னுடைய உடைகள் அனைத்தையும் பேக்கிங் செய்து வருவது போல் ஒரு காட்சி வெளியாகியுள்ளது.

இந்த தகவலை கயாத்திரியும் கூறியுள்ளார் இந்த பிரச்சனைக்கு காரணமும் ஓவியா என்பது போல் தான் தோன்றுகிறது.