தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை நமீதா. இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருச்சியில் மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் கட்சியில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு குறைந்து போனது பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று  புகழ் பெற்றார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட வாய்ப்புகள் குவியும் என நினைத்த நமீதாவிற்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் வந்தால் அதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.இந்நிலையில் கடந்த ஆண்டு, நமீதா அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தபோது, தன்னை பாஜக கட்சியில் இணைத்துக்கொண்டார். தற்போது தமிழக பாஜக மாநில பொருளாளராக நமீதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

இதையும் படிங்க: ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?

நமீதா டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த போது தான் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் நமீதாவை வைத்து பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாவட்டம் தோறும் நமீதாவை வைத்து பொதுக்கூட்டம் நடத்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நமீதாவிற்கு பேசப்பட்ட  தொகை 5 லட்சம் ரூபாயாம். ஒரு மாவட்டத்திலேயே பல கூட்டங்கள் நடக்கும் என்பதால் நமீதாவிற்கு பல கோடி கிடைத்திருக்க வேண்டியது. 

 

இதையும் படிங்க: இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

அப்படி ஒரு பொதுக்கூட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமர்ந்திருந்த போது அங்கு வந்த நமீதா, அவரை வணங்காமல் கூட்டத்தினரை பார்த்து கையசைத்துள்ளார். நமீதாவை பார்த்த ஆர்வத்தில் ரசிகர்களும் ஆராவரம் செய்துள்ளனர். இதனால் ஜெயலலிதா கோபமடைந்ததாகவும், அன்றிலிருந்து நமீதாவை கட்சி பணிகளில் ஈடுபடுத்த வேண்டாமென உத்தரவு போட்டதாகவும் கூறப்படுகிறது.