nameetha marriage on 24th november

பிக்பாஸ் புகழ் நடிகை நமீதாவுக்கும், அவரது நண்பரும், காதலருமான வீராவுக்கும் வரும் 24 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது வயது 36. தெலுங்கில் அறிமுகமான நமிதா, தமிழில் விஜயகாந்த் ஜோடியாக எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சரத்குமாருடன் ஏய் படத்தில் நடித்து பிரபலம் ஆனார். பின்னர் சத்தியராஜுடன் இங்கிலிஷ்காரன், விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், அஜித்துடன் பில்லா உள்பட ஏராளமான படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்தார். பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , வீரா தனது நெருங்கிய நண்பர் என்றும் தன்னை முழுமையாக புரிந்து கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீரா ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று கூறியுள்ள அவர், தங்களது திருமணம் ஒரு காதல் மற்றும் குடும்பத்தினர் சம்மதத்துடன் நடைபெறும் திருமணம் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீரா தனக்கு அறிமுகமானார் என்றும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அவர் தன்னிடம் காதலை வெளிப்படுத்தினார் என்றும் நமீதா கூறியுள்ளார்.

திருப்பதியில் திருமணம் செய்துகொள்ளப் போகும் தங்களுக்கு ரசிகர்களின் ஆசிர்வாதம் என்றும் தேவை என்றும் நமீதா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.