நடிகை நமீதா மற்றும் அவருடைய கணவர் சென்ற காரை, சேலம் புலிகுத்தி பகுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்ட போது...   நடிகை நமீதா நடுரோட்டில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்து நமீதாவின் கணவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அன்று நடந்த சம்பவம் குறித்து விளக்கி கூறியுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது...  "எனது மனைவி நமீதாவும் நானும் ஏற்காட்டில் படப்பிடிப்பிற்காக காரில் சென்றோம். இரவு இரண்டரை மணி அளவில் காரின் பின் இருக்கையில் நமீதா தூங்கிக் கொண்டிருந்தார். மூன்று இடங்களில் எங்கள் காரை நிறுத்தி சோதனை போட்டனர். அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தோம்.

சேலத்திலும் தேர்தல் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை போட்டனர். அதில் ஒருவர் குரூரமாக நடந்துகொண்டார். காரின் பின் இருக்கையில் சோதனை செய்ய வேண்டும் என்றார், எனது மனைவி தூங்குகிறார் தேவைப்பட்டால் சோதனை செய்யுங்கள் என்றேன். 

அவர் பின்பக்க கதவை திறந்தார். அப்போது கதவில் சாய்ந்து தூங்கி கொண்டிருந்த நமீதா வெளியே சாய்ந்தார். அதன்பிறகும் அவர் சோதனையைத் தொடர்ந்தார். பின்னர் நமீதாவின் கைப்பையை சோதனை செய்ய வேண்டும் என்றனர்.

அது தனிப்பட்ட சில பொருட்கள் இருந்ததால், பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தான் சோதனை செய்ய வேண்டும் என்று நமீதா வாதாடினார், அப்படி சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது.

இதனால் நமீதா அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.  இதனை தவறாக சிலர் பரப்பி விட்டதாக நமீதாவின் கணவர் வீரேந்திரா தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.