nameetha acting heroine role

'எங்கள் அண்ணா' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆன நடிகை நமீதா, தொடர்ந்து 'ஏய்', 'இங்கிலிஷ்காரன்' என பல படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்தார்.

இவருடைய கவர்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், இவர் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்காததால், 100 கிலோவிற்கும் அதிகமாக எடை போட்டுவிட்டார்.

இவரது உருவத்தால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது, ஒரு கட்டத்தில் படங்களே இல்லாமல் போக சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.

தற்போது கடினமாக உடல் பயிற்சிகள் மேற்கொண்டு உடல் எடையை 70 கிலோவிற்கு கொண்டுவந்துள்ள நமீதா, தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார். இவர் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த 'புலிமுருகன்' திரைப்படம் வெற்றியடையவே இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

மேலும் இப்போது 'மியா' என்கிற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திரில்லர் படமாக எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் நமீதா குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை மச்சான்ஸ் என்று கூறி ரசிகர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்ட நமிதாவின் நடிப்பு இந்த திரைப்படத்தின் மூலம் வேறு விதமாக இருக்கும் என நமீதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.