nalla naal parthu solren movie audio launch

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப் பற்றி உள்ளது. 

இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. 

இந்தப் படத்தில் வித்தியாசமான நடிப்பால் படத்தின் ட்ரைலரிலேயே அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. மேலும் இப்படத்தில் 8 வேடங்களில் விஜய் சேதுபதியைக் காட்டியுள்ளார் இயக்குனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில்,இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. 

இந்தப் படத்தில் கதாநாயகிகளாக நிகாரிகா கோனிடேலா மற்றும் ‘ப்பா’புகழ் காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். அதே போல் விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 6ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திரக் கலை விழாவில் மிக பிரம்மாண்டமாக நிகழ இருக்கிறது.