திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் என்னுடைய மகன் திருமணத்திற்கு வரவேண்டாம் என்று நாகர்ஜூனா கேட்டுக் கொண்டாராம்.

தெலுங்கு சினிமாவில் பிரபல நட்சத்திரங்களான நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் திருமணம் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இவர்களது திருமணம், இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடக்கயிருக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் கலந்து கொள்ள சினிமா பிரபலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பில்லையாம். இதனை நாக சைதன்யாவின் தந்தையான நாகர்ஜூனாவே தெரிவித்துள்ளார். சமந்தா மற்றும் நாக சைதன்யாவிற்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக நண்பர்கள் இருந்தாலும், அவர்களுக்கு அழைப்பில்லையாம்.

ஆனால் ஐதராபாத்தில் நடக்கயிருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, திரையுலகினரை அழைக்க இருக்கிறார்களாம்.