நாகசைதன்யா - அரவிந்த் சாமி மோதல்..! பரபரப்பாக தயாராகும் வெங்கட் பிரபுவின் படம்.!
நடிகர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் இன்று படமாக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் நாக சைதன்யாவும் இணைந்திருக்கக்கூடியத் திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில், மிகப்பெரிய பட்ஜெட்டில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் உருவாகி வருகிறது. பவன் குமார் வழங்ககூடிய இந்தத் திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.
நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, நடிகர் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்கிறார். கதையின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் அரவிந்த் சுவாமி இணைந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மகேஷ் மாத்யூ மாஸ்டரின் மேற்பார்வையில் படமாக்கப்பட்டுள்ளது. நாக சைதன்யா மற்றும் அரவிந்த் சுவாமி இருவரும் மோதிக்கொண்ட காட்சிகள் இன்று படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் திரையில் இவர்களை இணைந்து பார்ப்பது நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டக் கூடிய ஒன்றாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் கீர்த்தி ஷெட்டி, சரத்குமார் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்று உள்ளனர். விறுவிறுப்பாக இதன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இரு மொழிகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தின் மூலம் நடிகர் நாக சைதன்யா நேரடித் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார். அதேபோல, இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகிறார். இசையில் மேதைகளான தந்தை-மகன் இணை 'இசைஞானி' இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
- #nc22 movie
- naga chaitanya movie
- naga chaitanya movies
- naga chaitanya nc22 venkat prabhu
- naga chaitanya new movie
- naga chaitanya new movie nc22
- naga chaitanya venkat prabhu
- naga chaitanya venkat prabhu #nc22 movie
- nagachaitanya new movie update.
- nc22 movie update
- nc22 naga chaitanya full movie
- venkat prabhu
- venkat prabhu interview
- venkat prabhu movies
- venkat prabhu next movie update
- venkat prabu naga chaitanya movie