Asianet News TamilAsianet News Tamil

மணமகன் கெட்டப்பில் ஊர்வலம் வந்த நாக சைதன்யா! சோபிதாவுடன் ரகசிய திருமணமா? வைரலாகும் வீடியோ!

நடிகர் நாக சைதன்யா, மணமகன் கெட்டப்பில் மேள தாளங்களுடன் மாப்பிள்ளை ஊர்தியில் வலம் வரும் வீடியோ வெளியாகி, நாக சைத்தாயா - சோபிதாவுக்கு ரகசிய திருமணமா நடந்து விட்டதா? என்கிற சந்தேகத்தை ரசிகர்களுக்கு எழ வைத்துள்ளது.
 

Naga Chaitanya secret marriage with Sobhita Dhulipala? viral video
Author
First Published Aug 30, 2024, 5:38 PM IST | Last Updated Aug 30, 2024, 6:49 PM IST

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த ஒரே வருடத்தில், நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்ய துவங்கிய நாக சைதன்யா, பெற்றோர் சம்மதத்துடன் தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கும் தயாராகி உள்ளார். இவர்களின் திருமணத்தை உறுதி படுத்தும் விதமாக கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி, இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நாகர்ஜூனாவின் வீட்டில் நடந்தது.

இதில் நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் அவ்வப்போது இவர்களை பற்றிய செய்திகளும் சமூக வலைத்தளத்தில் விவாதத்திற்கு ஆளாகிறது. அந்த வகையில் சமந்தாவின் நண்பர் ஜூல்கர், மறைமுகமாக சோபிதாவை சாடி, சமந்தாவின் விவகாரத்துக்கு சோபிதா தான் காரணம் என்பது போல் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் ரசிகர்களும் நாக சைத்தாயா சோபிதாவுக்காக தான் சமந்தாவை விவாகரத்து செய்தாரா என பேச துவங்கினர்.

Naga Chaitanya secret marriage with Sobhita Dhulipala? viral video

கமல் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி? பரபரப்பாக நடக்கும் பிக்பாஸ் சீசன் 8 ப்ரோமோ ஷூட்டிங்!

ஆனால் தற்போது வரை முடிந்து போன வாழ்க்கை குறித்து சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் சைத்தாயாவின் அம்மா, அதாவது நாகர்ஜூனாவின் முதல் மனைவி லட்சுமி டகுபதி கலந்து கொள்ளாததால், சமந்தாவை சைதன்யா பிரிந்தது அவருக்கு பிடிக்கவில்லை என்றும், இதன் காரணமாகவே.. அவர் கலந்து கொள்ளவில்லை என சில பேச்சுகள் அடிபட்டது.

இது ஒருபுறம் இருக்க, நடிகர் நாக சைத்தாயா திடீர் என மாப்பிள்ளை கெட்டப்பில், மணமகன் ஊர்தியில் மேலைத்தளங்களுடன் வலம் வந்த வீடியோ வெளியாகி இவருக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதா? என்கிற சந்தேகத்தை ரசிகர்கள் மனதில் எழ வைத்தது. அதே நேரம் சைதன்யா பக்கத்தில் சோபிதா துலிபாலா இல்லை என்பதால் ஏன் சைதன்யா இப்படி மாப்பிள்ளை கெட்டப்பில்  என பலரும் சந்தேகங்களை எழுப்பிய நிலையில்... இதன் பின்னணி குறித்து தெரிய வந்துள்ளது.

Naga Chaitanya secret marriage with Sobhita Dhulipala? viral video

சமீபத்தில்  ஹைதராபாத்தில் நடந்த கடை  திறப்பு விழா ஒன்றில் நாக சைத்தாயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கடையை திறந்து வைத்துள்ளார். இதற்காக தான், இவரை மணமகன் ஊர்தியில் அமர வைத்து, நிஜ மாப்பிள்ளை போல அந்த கடை நிறுவனத்தினர் அழைத்து சென்றுள்ளனர். இது அந்த கடையில்  புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் யுக்தியை காட்டுகிறது. இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை; நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு நடிகை புகார்!
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios