பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள், தோல்வி அடைந்தாலும் அந்த படத்தில் பெரிய நடிகர் நடிகைகள் நடித்திருந்தாலும் அவர்களுக்கு அதிக தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. 

தற்போது புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. தயாரிப்பு செலவுகளை கட்டுப்படுத்த நடிகர் - நடிகைகள் சம்பளத்தை குறிக்க வேண்டும் என்று பட அதிபர்கள் நீண்ட காலமாக வற்புறுத்தி வருகின்றனர். ஆனாலும் சில தயாரிப்பாளர்கள் அதற்கு உடன் படாமல் பெரிய கதாநாயகர்களுக்கு போட்டி போட்டு அதிக சம்பளம் ஏற்றிவிடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதே நிலைதான் கதாநாயகிகளுக்கும். ஒரு நடிகையின் படம் வெற்றிபெறும் போது அவருக்கு அதிக சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்ய பட அதிபர்கள் முன்டியடிப்பதால் படத்துக்கு படம் சம்பால விகிதம் எகிறுகிறது. நயன்தாராவுக்கும் அனுஷ்காவுக்கும் கூட இப்படித்தான் சம்பவம் எகிறி இருப்பதாக கூறப்படுகிறது.

கதாநாயகர்கள் சம்பளம் அதிக பட்சமாக 60 கோடி என்றும், கதாநாயகிகளுக்கு 5 கோடி என்றும் உயர்த்து இருப்பதாக விமர்சிக்கப்பட்டன. தற்போதயா இளம் கதாநாயகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சம்பளம் கணிசமாக உயர்ந்து இருப்பதாக கூறுகின்றனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம் பட அதிபர்கள் செலவுகளை குறைக்க அக்கறை எடுத்து வருகிறது. டிஜிட்டல் சேவை அமைப்புகள் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியுள்ளது. தியேட்டர்களில் டிக்கெட்டுகளை கம்ப்யூட்டர் மயமாக்கி மொத்த வசூலை அறிந்து அதன் அடிப்படையில் நடிகர்கள் சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று சங்கத்தில் தலைவர் விஷால் கூறியுள்ளார்.

இந்தி நடிகர்களை பொறுத்த வரை சங்கங்கள் சம்பளத்தில் குறிபட்ட தொகையை மட்டும் முன்பணமாக வாங்கிக்கொண்டு மீதி தொகையை படம் வியாபாரம் ஆனபிறகு அதில் இருந்து ஒரு பங்கை வாங்கிக்கொண்டு மீதி தொகையை படம் வியாபாரம் ஆன பிறகு அதில் இருந்து ஒரு பங்கை வாங்கிக்கொள்கிறார்கள். அந்த வழக்கம் தமிழ் சினிமாவிலும் நடை முறைக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்கிற பேச்சும் எழுந்துள்ளது. 

இதன் காரணமாக வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததும், நடிகர் - நடிகைகளுக்கு அவர்களுடைய படங்களில் வியாபாரத்துக்கு ஏற்பவும் தியேட்டர்களின் வசூல் அடிப்படையிலும் சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.