கடைசியாக நடிகர் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று தென்னிந்திய நடிகர் சங்கத்தை காப்பாற்றியது. இதை தொடர்ந்து மீண்டும் நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து, தற்போது தனி அதிகாரியின் பொறுப்பில் நடிகர் சங்கம் இயங்கி வருகிறது.
கடைசியாக நடிகர் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று தென்னிந்திய நடிகர் சங்கத்தை காப்பாற்றியது. இதை தொடர்ந்து மீண்டும் நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து, தற்போது தனி அதிகாரியின் பொறுப்பில் நடிகர் சங்கம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கோரோனோ வைரஸின் தாக்கத்தால் தமிழகத்தில் பட பிடிப்பு பணிகள் முடங்கி உள்ளதால், பல துணை நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... "கொரோனா வைரஸ் நோய் காரணமாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே முடங்கியுள்ளது. திடீர் என்று அறிவிக்கப்பட்ட படப்பிடிப்பு தடையால் நடிகர் சங்க உறுப்பினர்களில் துணை நடிகர்கள் . நடிகைகள், அனைத்து மாவட்டத்தை சேர்ந்த நாடக நடிகர்கள் மற்றும் மாதந்தோறும் ஓய்வு உதவி தொகை பெரும் மூத்த கலைஞர்கள் ஆகியோர்கள் தினசரி வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
நடிகர் சங்கத்தில் 70 சதவீத உறுப்பினர்கள் அன்றாடம் நடைபெறும் சினிமா படப்பிடிப்பு பணிகளையே நம்பி இருப்பவர்கள். தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பெப்சி சார்பில் இன்று பெரிய நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டு உதவிகளும் வந்துகொண்டிருக்கின்றன இந்நிலையில் இச்சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளும் மற்றும் சில உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது.
இதனை பரிசீலனை செய்யும்போது நமது சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பலரும் வேலை வாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது. எனவே அவர்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை புர்த்தி செய்ய வேண்டியதும், அவர்களுக்கு உதவுவதும் நமது தலையாய கடமையாகும். நமது சங்கத்தை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதநேய பண்பாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் கீழ்க்கண்ட நடிகர் சங்க வங்கி கணக்கில் தங்களால் இயன்ற நிதியை வழங்கி உதவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தனி அதிகாரி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

