தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் ஒன்று கூடி தங்களுடைய வீர விளையாட்டை மீட்டெடுக்க முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இவ்வளவு நாட்களாக நடிகர் சங்கத்தின் ஆதரவு இல்லாமல் தனியாக நின்று பலர் மக்களுக்காக போராடி வந்தனர்.
இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் தற்போது மக்கள் பிரச்சனைகளுக்கு நாங்களும் குரல் கொடுக்க தவறமாட்டோம் என கூறி தென்னிந்திய நடிகர் சங்கமும் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதிக்கவுள்ளது.
வரும் 20ம் தேதி காலை முதல் மாலை வரை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
மேலும் அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது மெரினாவில் நடந்துவரும் இளைஞர்களின் போராட்டத்தில் ஏற்கனவே பல்வேறு நடிகர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
