‘நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான குழறுபடிகள் அளவுக்கு அதிகமானதால் எந்த இடத்தில் தேர்தல் நடக்க்கிறது என்பது கூட இன்று காலைவரை பல உறுப்பினர்களுக்குத் தெரியவில்லை’ என்று ஆதங்கப்படுகிறார் நடிகை குஷ்பு.

நடிகர் சங்க தேர்தல் புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறார்கள். அனைத்து நடிகர்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இதில் வாக்களிக்க வந்த குஷ்பு கூறும்போது, ‘நடிகர் சங்க தேர்தல் நடக்குமா என்று கேள்வி குறியாக இருந்தது. பெரும் குழப்பங்களுக்குப்பின்னர் இன்று வெற்றிகரமாக நடந்து வருகிறது. நியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும். நிறைய பேருக்கு தேர்தல் எங்கு நடக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த முறை எங்கு நடந்ததோ அங்குதான் தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குப்பதிவு நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.