Nadigar Sangam Building : நடிகர் சங்க கட்டிடம் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வீடியோ மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Nadigar Sangam Building : கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக நடிகர் சங்கம் கட்டடம் கட்டுமான பணி தொடங்கியது. இதற்கு போதுமான நிதி இல்லாத நிலையில் கலை நிகழ்ச்சிகள் மூலமாக நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டப்பட்டது. மேலும், நடிகர்கள், நடிகைகளும் முயன்றளவு பங்களிப்பு அளித்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தான் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில், நாசர் மற்றும் பாக்யராஜ் அணிகள் மோதின.
இதில், நாசர் தலைமையிலான அணி 2ஆவது முறையும் வெற்றி கண்டது. இதற்கிடையில் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தொடர்ந்து 75 சதவிகித கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சிய 25 சதவிகித கட்டுமான பணிகளுக்கு போதுமான நிதி வங்கியில் கடனாக பெறப்பட்டது. இப்போது கட்டுமான பணிகள் வேகமெடுத்துள்ளன.
தற்போது கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இற்தி கட்டத்தை நெருங்கிவிட்டது. இது தொடர்பான வீடியோவானது நடிகர் சங்க கட்டுமான கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்டுள்ளது. இது குறித்து விஷாலை திருமணம் செய்து கொள்ள இருக்கும் சாய் தன்ஷிகாவும் தன் பங்கிற்கு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே விஷால் நடிகர் சங்கம் கட்டி முடித்த பிறகு தனது திருமணம் நடைபெறும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி சமீபத்தில் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்திய நிலையில் நடிகர் சங்க கட்டட பணிகள் முடிந்து அங்கு நடக்கும் முதல் திருமணமாக விஷால் மற்றூம் சாய் தன்ஷிகா திருமணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடிகர் சங்க கட்டடத்தில் திரையரங்கம், நடிப்பு பயிற்சி அரங்கங்கள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன.
