Asianet News TamilAsianet News Tamil

மீ டூவில் புகார் அளித்த நடிகைக்கு தடை !! நடிகர் மீது பொய் குற்றச்சாட்டு கூறியதால் அதிரடி நடவடிக்கை !!

வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்த ராணி என்ற நடிகை படப்பிடிப்பின் போது நடிகர் சண்முகராஜன் தன்னை தாக்கினார் என்றர் பாலியில் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் பொய் புகார் அளித்ததையடுத்து அவர் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சித் தொடர்களிலோ நடிக்கக் நடிகர் சங்கம் தடைவிதித்துள்ளது.

nadigar sangam ban to act cinema
Author
Chennai, First Published Dec 15, 2018, 7:13 AM IST

வில்லுப்பாட்டுக்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராணி. ஜெமினி படத்தில் ‘ஓ போடு ஓ போடு,’ காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடல்களில் நடனம் ஆடினார். இவர் தனியார் டெலிவி‌ஷனில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் சண்முகராஜனின் மனைவியாக ராணி நடித்து வந்தார்.
nadigar sangam ban to act cinema
நடிகர் சண்முகராஜன் விருமாண்டி, சிவாஜி, சண்டக்கோழி உள்பட பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். செங்குன்றத்தில் நடந்த நந்தினி தொடர் படப்பிடிப்பில் சண்முகராஜன் தன்னை தாக்கியதாக ராணி கடந்த அக்டோபர் மாதம் போலீசில் புகார் அளித்தார். பாலியல் தொல்லை கொடுத்தாகவும் கூறினார்.

nadigar sangam ban to act cinema

பின்னர் சண்முகராஜன் வருத்தம் தெரிவித்ததால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டதாகவும் தெரிவித்தார். ராணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும் தன்மீது பொய்புகார் சொன்ன அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சண்முகராஜன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். இதற்கு விளக்கம் கேட்டு ராணிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 
nadigar sangam ban to act cinema
இது குறித்த சண்முகராஜனுக்கு நடிகர் சங்கம் தற்போது அனுப்பி உள்ள கடிதத்தில் ,  நீங்கள் அளித்த கடிதத்துக்கு விளக்கம் அளிக்கும்படி ராணிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு இதுவரை அவர் விளக்கம் அளிக்கவில்லை.

நடிகர் சங்க செயற்குழு நேரில் ஆஜராகி நீங்கள் விளக்கம் அளித்தீர்கள். உங்கள் மீது பாலியல் புகார் காழ்ப்புணர்ச்சியால் கொடுக்கப்பட்டது என்பதை தாங்கள் அளித்த விளக்கம் மூலம் தெரிந்து கொண்டோம். 
nadigar sangam ban to act cinema
இனிவரும் காலத்தில் நடிகை ராணி திரைப்படங்களிலோ, அல்லது தொலைக்காட்சி தொடரிலோ நடிக்க வரும்போது தங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவர் தொடர்ந்து திரைப்பட துறையில் நடிக்க அனுமதி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios