நடிகர் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டு இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தை ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார்.

சமந்தா கதாநாயகியாகவும், மிஷ்கின், பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தில், ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருந்த கதாப்பாத்திரத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை நதியா தான். சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். பின் திடீர் என விலகுவதாக கூறினார். 

இவர் இந்த படத்தில் இருந்து விலகியது குறித்து பட தரப்பினர் கூறுகையில்... மிஷ்கினை, நதியா கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சி இரண்டு நாட்கள் படமாக்கப்பட்டதாகவும். காட்சி யதார்த்தமாக வர வேண்டும் என்பதற்காக மிஷ்கின், "தன்னை நிஜமாகவே அடிக்குமாறு" நதியாவிடம் கூறினார். அதனால் நதியாவும் நிஜமாகவே அவரை அடித்தார். 

ஆனால் இயக்குனர் எதிர்பார்த்த நடிப்பு நதியாவிடமிருந்து வரவில்லை என்பதால். 56 டேக்குகளில் 56 முறை நிஜமாகவே மிஷ்கினை அடித்தும் குறிப்பிட்ட காட்சி நன்றாக வரவில்லை. இதனால் மனம் நொந்து, இதற்கு மேல் நடிக்க முடியாது வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நதியா படத்திலிருந்து விலகி விலகினார் என கூறினர். 

இவருக்கு பின் இந்த படத்தில் கமிட் ஆன நடிகை ரம்யா கிருஷ்ணன்  , இரண்டே டேக்கில் இரண்டே அடி அடித்து டேக்கை ஓகே பண்ணி தட்டி தூக்கி விட்டார் எனவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் " 56 முறை  அடி வாங்கிய மிஷ்கின், மிகவும் கோவமாக "இனிமேல் நதியைவிடம் அடிவாங்கி நடிக்க மாட்டேன். அவர் விலகவில்லை என்றால் நான் விலகி கொள்கிறேன்" என்று கூறியதாகவும், "நடிக்க வராதவங்களை ஏன் நடிக்க வைக்கிறீங்க என இயக்குனரிடம் சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.  நதியா முன்பே இந்த பிரச்சனை நடந்ததால், திடீர் என நதியா இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக கூறி மிகவும் கோபமாக சென்று விட்டாராம். பின் படக்குழுவினர் எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சி செய்தும் நதியா தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.