nachiar official trailer released today
அண்மையில் சர்ச்சைக்கு உள்ளான நாச்சியார் படத்தின் அதிகார பூர்வ டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
பெண்களை இழிவுபடுத்தும் அந்த ஒற்றைச் சொல்லுக்காக பெரும் பரபரப்பையும் கண்டனத்தையும் பெற்றது முன்னர் வெளியான முன்னோட்டம். இந்நிலையில், ஜோதிகா போலீஸ் அதிகாரி வேடத்தில் கம்பீரம் காட்டும் ஒன்றரை நிமிட ட்ரெய்லர் இன்று வெளியிடப் பட்டது. இயக்குனர் பாலாவின் டச் சில இடங்களில் அதில் தெரிகிறது.
நீ போலீஸா.. இல்ல ப்ரொஃபஷனல் ரவுடியாம்மா... என்று கேட்கும் குரல், நான் போலீஸ் இல்லடா பொறுக்கி என்று விக்ரம் சாமியாடும் வசனம் நினைவூட்டுகிறது.
இந்த ட்ரெய்லரில் ப்ளடிலில்லிபுட் என்கிற வசனம் தவிர அப்படி ஒன்றும் விவகாரமான வசனங்கள் இல்லை என்பது ஓர் ஆறுதல்தான்!
https://youtu.be/DTtnh86GnTY
