2 ஆயிரம் டான்சர்களுடன் விஜய் ஆடிய மாஸ் குத்து சாங்... நா ரெடி பாடலின் ரிலீஸ் நேரத்தை அறிவித்தது லியோ படக்குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெறும் நான் ரெடி பாடல் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவும், வில்லனாக சஞ்சய் தத்தும் நடித்துள்ளனர். இதுதவிர ஆக்ஷன் கிங் அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
லியோ படத்தின் ஷூட்டிங்கும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடிகர் விஜய்க்கு இன்னும் 10 நாட்களே ஷூட்டிங் எஞ்சி உள்ளது. இதன்பின் பின்னணி பணிகள் தொடங்க உள்ளன. லியோ பட நாயகன் விஜய் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருவதால், அவருக்கு பிறந்தநாள் பரிசாக, லியோ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்... விஜய் மக்கள் இயக்கத்தினரின் வாகன பேரணிக்கு அனுமதி தர மறுத்த போலீசார் - காரணம் என்ன?
அந்த வகையில் இன்று 12 மணியளவில் விஜய்யின் லியோ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ரத்தம் தெறிக்க வெளியான விஜய்யின் மாஸ் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு அடுத்தபடியா என்ன அப்டேட் வெளியாகும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அடுத்த தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.
அதன்படி லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ விஜய் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என முன்னரே தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், அதன் ரிலீஸ் நேரத்தை சஸ்பென்ஸாக வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அதை ஒரு சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.
அதன்படி நா ரெடி பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பாடலில் தான் நடிகர் விஜய் சுமார் 2000 நடன கலைஞர்களுடன் நடனம் ஆடி இருக்கிறார். அதனால் இது வாத்தி கம்மிங் பாடலைப் போலவே மாஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலை நடிகர் விஜய் தான் பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அரசுக்கு போட்டியாக தனியார் இலவச பஸ் சேவை... தமிழகம், கேரளாவில் கெத்து காட்டிய விஜய் ரசிகர்கள்