தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசரமாக உதவ வேண்டும் என பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசரமாக உதவ வேண்டும் என பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்மேற்குப் பருவ காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்" என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அண்மையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். தற்போது இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கும், இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? அல்லது இவர் இயக்கும் படத்திற்கான ஏதேனும் புரமோஷனா? என நெட்டிசன்கள் புரியாமல் தவித்து வருகின்றனர். பலரும் என்னாச்சு? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், என்ன காரணத்திற்காக யாரால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை சீனுராமசாமி கூறவில்லை.