My life is good because it is not available in Tamil - Vidya Balan ...
தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தான், என் வாழ்க்கை தற்போது நன்றாக இருக்கிறது என்று பாலிவுட் நடிகை வித்யாபாலன் தெரிவித்தார்.
பாலிவுட் முன்னணி நடிகை வித்யா பாலன். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வித்தியாசமான பல படங்களில் நடித்து பேரும் புகழும் அடைந்து உச்சத்தில் இருப்பவர்.
இவரை ரஜினிக்கு ஜோடியாக ‘காலா’ படத்திலும், தனுஷுக்கு அம்மாவாக நடிக்க ‘கொடி’ படத்திலும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த வாய்ப்புகளை வித்யா பாலன் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் வித்யா பாலன் கொடுத்த பேட்டி ஒன்றில், “ஆரம்பத்தில் எனக்குத் தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், எனக்கு மகிழ்ச்சிதான்.
தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தான், என் வாழ்க்கை தற்போது நன்றாக இருக்கிறது. என் கனவு நனவாகி இருக்கிறது.
நல்ல கதை அமைந்தால், கதையைக் கேட்கும்போது எனக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் தமிழில் நடிப்பேன்’’ என்று தெரிவித்தார்.
