Kamal: விருமாண்டி 2-விற்கு எனக்கு இந்த இயக்குனர் தான் வேணும்...அடம் பிடிக்கும் கமல்! இயக்குனர் யார் தெரியுமா?

Kamal haasan latest update: கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில், கமலின் அடுத்த படமான விருமாண்டி 2 வில் முத்தையா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது.

Muthaiah is the new director for Kamal haasan Virumandi - 2

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில், அதன் பின்னணி பணிகள் முழுவீச்சில் துவங்கி, படம் ரிலீசுக்கு தயாராகி கொண்டு இருக்கிறது. இருப்பினும், கமலின் அடுத்தபடத்தினை பற்றிய தகவல் வெளியாகி அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது. 

தமிழ் திரையுலகில் கமல்ஹாசன் தவிர்க்க முடியாத நடிகர்களில், ஒருவர் ஆவார். இவர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வருபவர். சினிமா, அரசியல் போன்றவற்றில் எப்போதும் பிஸியாக இருந்து வருகிறார். 

Muthaiah is the new director for Kamal haasan Virumandi - 2

'விக்ரம்’ படத்தின் ரிலீஸ்:

கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில், கனகராஜின் பிறந்தநாளான மார்ச் 14 ல் விக்ரம் ரிலீஸ் தேதி அறிவிக்க உள்ளதாக சமீபத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் அறிவித்தது.இதனால் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே மாதத்தில் விக்ரம் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 வின் நிலை என்ன..?

விக்ரம் படத்தை முடித்த பிறகு கமல், நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதவிர பா.ரஞ்சித் உடன் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் உடன் ஒரு படம் என ஏராளமான படங்கள் கமல் கைவசம் உள்ளது. இந்நிலையில், தற்போது அவர் மேலும் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Muthaiah is the new director for Kamal haasan Virumandi - 2

விருமாண்டி 2-இயக்குனர் யார்,..?

தற்போது, கமல்ஹாசன் கிராமப்புற படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கிராமபுற பிரபல இயக்குனரான முத்தையாவை தேர்வு செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அதன்படி, சமீபத்தில் கமலை சந்தித்து இயக்குனர் முத்தையா கதை ஒன்றை சொன்னதாகவும், அந்தக் கதை கமலுக்கு பிடித்துப்போனதால், நடிக்க ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கமல்-முத்தையா இணையும் படத்திற்கு விருமாண்டி 2 என டைட்டில் வைக்க போகிறார்களாம்.  இருப்பினும், தயாரிப்பு நிறுவனத்திலிருந்து இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

Muthaiah is the new director for Kamal haasan Virumandi - 2

முத்தையாவின் 'விருமன்’ படம்:

இயக்குனர் முத்தையா கார்த்திகை வைத்து ‘கொம்பன்’ மற்றும்  சசிகுமாரை வைத்து ‘குட்டி புலி’ போன்ற புகழ் பெற்ற கிராமத்து படங்களை இயக்கியவர் ஆவார். முத்தையா அண்மையில் தான் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வரவிருக்கும் ‘விருமன்’ படத்தை  முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார்.மேலும், வருகிற மே மாதம் இப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   

மேலும் படிக்க..Valimai: வலிமை படத்தில் அஜித்திற்கு அருள் வாக்கு தந்த அம்மன் தாயீ....வைரல் புகைப்படம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios