must want condem advertisment in tv channels

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். 30 வயதை கடந்த நடிகையாக இவர் இருந்தாலும் இவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

ஆரம்பத்தில் இருந்து, முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்து வந்த இவர் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்து வரும் குயின் படத்தின் ரீமேக்கான 'பாரிஸ் பாரிஸ்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், காண்டம் விளம்பரம் அதிக நேரம் தொலைகாட்சிகளில் கண்டிப்பாக ஒளிப்பரப்ப வேண்டும் என தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் தற்போது காண்டம் விளம்பரங்களை தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில்....

"இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டும் என்றால் காண்டம் விளம்பரத்தை அதிகம் ஒளிபரப்பவேண்டும். அதை பார்த்தாவது சிலர் குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்திவிட வாய்ப்புண்டு" என கூறியுள்ளார்.