தளபதி விஜயின் GOAT.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த யுவன் சங்கர் ராஜா - என்ன அது தெரியுமா?
The Greatest of All Time : தளபதி விஜய் அவர்களின் 68வது படமாக உருவாகி வருகின்றது GOAT. பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய் இந்த படத்திக் நடிக்கின்றார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜன் லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்த படியாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடிக்க துவங்கிய திரைப்படம் தான் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". இந்த திரைப்படத்தில் இரு வெவ்வேறுக் கதாபாத்திரங்களில் தளபதி விஜய் அவர்கள் நடித்து வருகின்றார்.
இந்த படத்தின் படபிடிப்பின் போது தான் தனது "தமிழக வெற்றிக் கழகத்தின்" அறிவிப்பை அவர் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக தனது 69வது திரைப்பட பணிகளை மேற்கொள்ள உள்ள விஜய், அதன் பிறகு நடிப்பிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்று, முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளார்.
தளபதி விஜயின் இந்த கோட் திரைப்படம் எதிர்வரும் பெரிய பண்டிகை நாளன்று வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், அந்த படம் குறித்த ஒரு முக்கிய தகவலை ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்படத்தின் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட தகவலின்படி கோட் திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் ஒரு பாடலை பாடி இருக்கின்றார்.
அவருடைய ரசிகர்களுக்கு விருந்தாக அந்த பாடல் அமையும் என்றும் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இந்த படத்தில் மூத்த நடிகர், நடிகைகளான பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா மற்றும் லைலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அதேபோல வைபவ் மற்றும் பிரேம்ஜி ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.