தமிழ் திரையுலகில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், திடீரென ஆட்டோ டிரைவராக மாறி உள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். இதையடுத்து சூது கவ்வும், மெட்ராஸ், காலா, கபாலி, பைரவா, வட சென்னை, பரியேறும் பெருமாள், சார்பட்டா பரம்பரை என தொடர்ந்து பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவரது இசையமைப்பில் வெளியான தசரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தசரா படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜிகர்தண்டா 2, பிரபாஸின் பிரம்மாண்ட படமான பிராஜக்ட் கே, மாரி செல்வராஜ் இயக்கி வரும் வாழை போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சந்தோஷ் நாராயணன்.

இதையும் படியுங்கள்... உடல் எடை கூடி... வேற மாதிரி லுக்கில் மிரள வைக்கும் சூர்யா! ரசிகர்களை ஆச்சர்யப்படவைத்த லேட்டஸ்ட் புகைப்படம்!

View post on Instagram

இப்படி பிசியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தோஷ் நாராயணன் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் ஆட்டோ ஓட்டி வரும் காட்சிகள் இடம்பெற்றும் உள்ளன. பின்னணியில் ஜகமே தந்திரம் படத்திற்காக அவர் இசையமைத்த ரகிட ரகிடா பாடலை ஒலிக்கவிட்டபடி ஆட்டோ ஓட்டி செல்கிறார் சந்தோஷ் நாராயணன்.

வேலைக்கு செல்லும் போது தன்னுடைய குழுவினரை பிக்-அப் செய்துகொண்டு ஆட்டோவில் செல்வதாக அந்த பதிவில் சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டுள்ளார். அவர் அசால்டாக ஆட்டோ ஓட்டுவதைப் பார்த்த திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் அந்த ரீல்ஸ் வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... பட விழாவுக்கு பந்தாவாக வந்து... பொசுக்குனு தரையில் உட்கார்ந்த ஆதிபுருஷ் நாயகியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்