Music Director Deva: தனுஷ் படத்தில் வில்லனாக நடிக்க வந்த அழைப்பை நிரகாரித்தது ஏன்? இசையமைப்பாளர் தேவா விளக்கம்

தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ராயன் படத்தில் வில்லனாக நடிக்க வந்த அழைப்பை ஏற்க மறுத்தது ஏன் என்பது குறித்து இசையமைப்பாளர் தேவா விளக்கம் அளித்துள்ளார்.

Music Director Deva reveals why he refuse to play villain in dhanush raayan movie gan

குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவர்களின் பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது பாடல் திறமையை பாடி காட்டினார்கள். மேலும் பல்வேறு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இறுதி சுற்றானது நேற்று நடைபெற்றது. இதில் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களது பாடல் திறமையை பாடி காண்பித்தினர். 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயகங்களை வழங்கி கவுரவித்தார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் : காலத்திற்கு ஏற்ப ஸ்டைலை மாற்றி கொள்ள வேண்டும். மணிரத்தினம் படத்திற்கு படம் மாற்றியது போல் இப்பொழுது நான் மாற்றியாக வேண்டும் இல்லை என்றால் நிற்க முடியாது.

இதையும் படியுங்கள்... Aranmanai 4 : விஷாலுடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோத ரெடியான சுந்தர் சி... அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார். என்னை போல் சென்னை பாசை பேசுபவர் யாரும் இருக்க முடியாது என கூறினார். நான் முடியாது  என சொல்லி விட்டேன். தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என சூசகமாக பதில் அளித்தார். இறுதியாக ரஜினி படத்துக்கு மீண்டும் இசையமைப்பீர்களா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், இறைவனின் அருள் இருந்தால் மீண்டும் ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைப்பேன் என பேசினார்.

நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் தேவாவை தான் இயக்கி வரும் ராயன் படத்திற்கு தான் வில்லனாக நடிக்க அழைத்திருந்தார். அது தனுஷின் 50-வது படமாகும். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Box Office : ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை மூன்றே நாளில் தட்டிதூக்கிய ஆவேஷம் மற்றும் வர்ஷங்களுக்கு சேஷம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios