G.V. Prakash Kumar : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வெளியாகியுள்ள தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு, அப்படத்தின் பின்னணி இசையும் பெரும் பலம் சேர்த்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "டார்லிங்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதையின் நாயகனாக அறிமுகமானார் தான் ஜி.வி பிரகாஷ் குமார். ஆனால் அதற்கு முன்பு இருந்தே அவர் தமிழ் திரையுலகில் ஒரு மிகச்சிறந்த இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான "வெயில்" திரைப்படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக களம் இறங்கியது அனைவரும் அறிந்ததே. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இசை அமைப்பாளராகவும் திகழ்ந்துவரும் ஜி.வி பிரகாஷ் இசையில் நேற்று வெளியான 'கேப்டன் மில்லர்" திரைப்படம் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் நேற்று வெளியான அருண் விஜயின் "மிஷன் சாப்டர் 1" திரைப்படத்தின் இசையமைப்பாளரும் ஜி.வி பிரகாஷ்ராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

கமல் மற்றும் மாயா.. சர்ச்சை காமெடி செய்து சிக்கிய புகழ் & குரேஷி - மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ வைரல்!

இது ஒருபுறம் இருக்க GVP இசையில் இன்னும் ஒன்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்த ஆண்டும் எதிர் வருகின்ற 2025 ஆம் ஆண்டும் வெளியாக உள்ளது. குறிப்பாக சூர்யாவின் 43-வது திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் தான் இசையமைக்க இருக்கிறார். இது அவருடைய 100வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…

இப்படி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் கலக்கி வரும் ஜி.வி பிரகாஷ் குமார் தற்பொழுது ஒரு அறிமுக இயக்குனருடன் கைகோர்த்துள்ளார். தனது வித்தியாசமான திரைப்பட விமர்சனங்கள் மூலம் புகழ்பெற்று, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய "சினிமா பையன்" அபிஷேக் ராஜா இயக்குகின்ற ஒரு புதிய ப்ராஜெக்டில் இணைந்திருக்கிறார் ஜி.வி பிரகாஷ் குமார். இது குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஆனால் இது ஒரு முழு நீள திரைப்படமா? அல்லது ஒரு ஆல்பம் பாடலா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

சிங்கள் ஷாட் சண்டை காட்சி.. விஷாலை வைத்து வேற லெவல் பிளான் போடும் கனல் கண்ணன் - நாயகன் வெளியிட்ட அப்டேட்!