பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜென்யாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவரை மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவல் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அர்ஜுன் ஜென்யா. இளம் வயதிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட பல கன்னட திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

குறிப்பாக நடிகை திரிஷா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற '96 ' படத்தின் கன்னட ரீமேக்கான '99 ' படத்திற்கு இசையமைத்தவர் அர்ஜுன் ஜென்யா. இது அவரின் 100 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

39 வயதாகும் இசையமைப்பாளர் அர்ஜுன் ஜென்யாவின் உடல்நிலை நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.  கன்னடத்தில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ள இவர்,  சில பாடல்களையும்  பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.