பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபாஸை வைத்து நான்கு மொழிகளில் இயக்குனர் சுதீஷ் இயக்கும் ’சாஹோ’ திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் திடீர் என இயக்குனர்  ஏ.ஆர். முருகதாஸ் பிரபாஸைச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேசியுள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள, ஸ்பைடர் படம் இறுதிக்கட்ட பணியில் இருக்கும் நிலையில், இவர் அடுத்ததாக விஜயை வைத்து இயக்குவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை   முருகதாஸ் விஜயை வைத்து இயக்கிய பின் பிரபாஸின் படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இந்தத் தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், இந்த தகவலுக்கு ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் பிரபாஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்பு செய்தியும் வெளியாகவில்லை.