தமிழிசை மாற்றமா..? முரளிதர ராவ் கொடுத்த அதிரடி பதில்..!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வகித்து வரும் பதவியை பறிக்க வேண்டும் என பாஜக தேசியதலைவர் அமித் ஷாவிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளதாக தன்னை பற்றி வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார் பாஜக பொதுச்செயலாளரான முரளிதர ராவ்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

பாஜக தேசிய செயலாளரும், பொறுப்பாளருமான முரளி தர ராவ் தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், ஜூலை 9 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை குறித்தும், தேர்தலை சந்திக்க மேற்க்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  

ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவை அறிக்கையாக டெல்லியில் அமித்ஷா அவர்களை சந்தித்து தாக்கல் செய்தார் முரளி தர ராவ்.

அந்த அறிக்கையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை மாற்றப்பட வேண்டும் என தெரிவித்ததாக ஊடங்களில் இன்று செய்தி வெளியானது.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார் முரளிதர ராவ் மற்றும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து பதிவிட்டு உள்ளார்.

அதில், தமிழிசை சவுந்தரராஜன் குறித்து வெளியான தகவல் பொய்யானது என்றும், அடிப்படை ஆதாரமற்ற ஒரு செய்தியை ஊடகங்கள் பரப்பி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.இது ஒரு வதந்தி என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்...இதே போன்று தமிழிசை அவர்களிடம் கேட்கப்பட்ட போது,....

இது இன்று நேற்று அல்ல... நான் தமிழக பாஜக தலைவராக பதவியேற்ற காலம் முதலே....இப்படிதான் வதந்தி பரவிக்கொண்டு இருக்கிறது என அவருக்கே உண்டான ஸ்டைலில், போங்கப்பா போய் வேலையை பாருங்கப்பா என்ற பாணியில் பதில் அளித்து விட்டு சிரித்துக்கொண்டே சும்மா பந்தாவாக சென்றார்.