கதறி கதறி அழுத மும்தாஜ்...அதிர்சியில் ஆழ்ந்த போட்டியாளர்கள்.. வியந்து போன கமல்...

பிக்பாஸ் நிகழ்ச்சி 2 கமல் தொகுத்து வழங்கி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்த நிகழ்ச்சியயை பார்ப்பவர்கள் கூட, அங்குள்ள போட்டியாளர்களில் யாரையோ ஒருவரது நடத்தை தனக்கு ஒத்துப்போகிறது என்ற பாணியில் ரசனையோடு பார்க்கப் தொடங்கி விட்டனர்

அதில் குறிப்பாக நேற்று முன்தினம் ஒளிப்பரப்பப்பட்ட நிகழ்ச்சியில், பாலாஜி மற்றும் நித்யாவின் சண்டை காட்சிகள் மற்றும் அவர் பேசும் தகாத வார்தைகள் குறும்படமாக காண்பிக்கப்பட்டது. இதற்கிடையில், நேற்று  பிக்பாஸ் நிகழ்ச்சி 2 இல் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளராக மமதா வெளியேற்றப்பட்டார்

மமதாவை பொருத்தவரையில்அவர் பொதுவாகவே மிகவும் அமைதியாகவும் அனைவரிடமும் அவ்வளவுவாக பேசாதவர். இதை காரணமாக வைத்தே மமதா வெளியேற்றப்பட்டார்.

இது மற்ற போட்டியாளர்களுக்கு சற்று கஷ்டமாக இருந்தாலும் மமதாவின் வெளியேற்றம் நடிகை மும்தாஜால் தாங்கிக்கொள்ள முடியாமல் தேம்பி தேம்பி அழுதார்

இவர் தேம்பி தேம்பி அழுத்தி பார்த்து, மற்ற போட்டியாளர்களும் கண்ணீர் சிந்தினர்.

அனைவரிடமும் கட்டிப்பிடித்து விடை பெற்றார் மமதி. கடந்த இரண்டு வாரங்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்த  நிலையில், மும்தாஜ் உடன் இந்த அளவிற்கு மிகவும் பழகி இருந்துள்ளார் மமதி என்பது குறிப்பிடத்தக்கது.