அமரன் படம் வேண்டாம் என்றேன்: ஓபனாக பேசிய முகுந்தனின் அம்மா: என்ன காரணம் தெரியுமா?

Major Mukund Varadarajan Mother Geetha Talk about Amaran Movie : அமரன் படம் எடுக்க வேண்டாம் என்று சொன்னானேன், ஆனால் இயக்குநர் என்னை சம்மதிக்க வைத்தார் என்று முகுந்தனின் தாயார் கூறியுள்ளார்.

Mukund Varadarajan's mother Geetha has said why she told Refuse to make  Amaran Movie rsk

Major Mukund Varadarajan Mother Geetha Talk about Amaran Movie :சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படம் முழுக்க முழுக்க மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அவரது குடும்பம், காதல், திருமண வாழ்க்கை, இராணுவத்தில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய காட்சி என்று எல்லாவற்றையும் இந்த படம் தெளிவாக எடுத்துக் காட்டியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

மயங்கி விழுந்த கங்கை அமரன்! திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த ஆண்டு திரைக்கு வந்து சூப்பர் ஹிட் கொடுத்த படங்களின் பட்டியலில் அமரன் படமும் ஒன்று. கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படத்திற்கு போட்டியாக வந்த எந்தப் படமும் அமரன் படத்தின் கதை முன்பு ஜொலிக்கமுடியவில்லை. அது ஜெயம் ரவியின் பிரதர் படமாக இருந்தாலும் சரி, கவினின் பிளடி பெக்கர் படமாக இருந்தாலும் சரி, இரண்டுமே பெரியளவில் ஹிட் கொடுக்கவில்லை.

பிக்பாஸின் நாக் அவுட்! 2 பேரை காலி பண்ண உள்ளே வரும் EX போட்டியாளர்கள் - எதிர்பாராத ட்விஸ்ட்!

உலகம் முழுவதும் வெளியான அமரன் படம் ரூ.335 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு கடைசியில் திருப்பு முனையை இந்தப் படம் கொடுத்தது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் முகுந்த் வரதராஜனின் மனைவி ரெபேகா வர்கீஸ் கலந்து கொண்டு பேசினார். 2ஆவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்கள். ஆனால், அவர் மறுத்துவிட்டார். இப்போது தன்னுடைய மகளுடன் முகுந்த் வரதராஜனின் நினைவாகவே வாழ்ந்து வருகிறார்.

மதகஜராஜா 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ்: சோஷியல் மீடியாவுல கலாய்ப்பாங்களே என்று பயந்தேன்: சுந்தர் சி!

இந்த நிலையில் தான் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முகுந்த் வரதராஜனின் அம்மா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், அமரன் படத்தை எடுக்க வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு காரணம் என்னுடைய மகனின் நினைவு வந்து கொண்டே இருக்கும். அதனால், எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அதனால் தான் நான் படம் எடுக்க வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios