மயங்கி விழுந்த கங்கை அமரன்! திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
கோலிவுட் திரை உலகில், பன்முக திறமையாளராக இருக்கும் கங்கை அமரன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Veteran Director Gangai Amaran
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் உடன் பிறந்த சகோதரர் கங்கை அமரன். தன்னுடைய அண்ணன் இளையராஜாவை போல் இவரும் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர். அதே போல் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி இசை, பாடல் ஆசிரியர், பாடகர், என பன்முக திறமையாளராக அறியப்படுகிறார்.
Gangai Amaran Direct more than 20 Movies
இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கங்கை அமரன், சிறந்த இயக்குனராகவும் அறியப்படுகிறார். நடிகர் பிரபு நடிப்பில் 1982 ஆம் ஆண்டு வெளியான கோழி கூவுது திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கங்கை அமரன், இடைத்தொடர்ந்து கொக்கரக்கோ, பொழுது விடிஞ்சாச்சு, வெள்ளை புறா ஒன்று, எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், அண்ணனுக்கு ஜே, ஊரு விட்டு ஊரு வந்து, கோயில் காளை, உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக தெம்மாங்கு பாட்டுக்காரன் என்கிற திரைப்படத்தை 1997 ஆம் ஆண்டு இயக்கினார்.
பிக்பாஸின் நாக் அவுட்! 2 பேரை காலி பண்ண உள்ளே வரும் EX போட்டியாளர்கள் - எதிர்பாராத ட்விஸ்ட்!
Gangai Amaran Fall down in Shooting
இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கங்கை அமரன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Gangai Amaran Hospitalized
இவர் நடித்து வந்த திரைப்படம், சிவகங்கை அருகே படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது திடீரென உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கங்கை அமரன் மயங்கி கீழே விழுந்துளளர். இதை தொடர்ந்து பட குழுவினர் மதுரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் கங்கை அமரனுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து எதுவும் வெளியாகவில்லை. ரசிகர்கள் பலர் விரைவில் கங்கை அமரன் உடல்நலம் பெற தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் 'கேம் சேஞ்சர்'! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?
Gangai Amaran Son Venkat Prabhu and Prem ji
கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் இயக்கி முடித்துள்ள பார்ட்டி திரைப்படம் வெளியாக உள்ளது. விரைவில் தான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை வெங்கட் பிரபு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இவருடைய இளைய மகனான பிரேம்ஜி, திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து மசாலா பிசினஸ் ஒன்றையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.