பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாட்களில் இருந்ததே, போட்டியாளர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பேட்டி எடுப்பதில், பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், பிரபல இண்டிபெண்டெட் ஆல்பம் சிங்கர், முகேன் ராவ்வின், முறை பெண் துர்கா, பிரபல ஊடகம் ஒன்றிற்கு மலேசியாவில் இருந்து பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த பேட்டியில் இருவருக்கும் இடையே எந்த விதமான உறவு முறை உள்ளது. முகேன் தனக்காக என்னவெல்லாம் செய்துள்ளார் என்பது பற்றி விளக்கமாக கூறியுள்ளார். 

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிராமியிடம் முகேன் நடந்துகொள்ளும் விதம் தனக்கு கஷ்டத்தை கொடுப்பதாகவும். கட்டி பிடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார். அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் சாண்டி என்றும், சுத்தமாக பிடிக்காத போட்டியாளர் சாக்ஷி என்று கூறியுள்ளார்.