Asianet News TamilAsianet News Tamil

OTT-ஐ தொடர்ந்து வந்தாச்சு MTM..!

திரையுலகில் தற்போது ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகி வருவதை தொடர்ந்து, இதன் அடுத்த பரிமாண வளர்ச்சியாக திரையரங்காக மாற்றி படம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
 

movie to mobile new platform launched
Author
Chennai, First Published Jul 11, 2022, 5:44 PM IST

இதுவரை திரைப்படங்கள் திரையரங்குகளிலும் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் தற்போது OTT  தளங்களிலும் வந்தது வந்து  கொண்டும் இருக்கிறது. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக  உள்ளங்கையில் உள்ள அலைபேசியை திரையரங்கங்களாக மாற்றி தமிழ் திரையுல வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு திரைப்படங்களை மக்கள் பார்த்து ரசிக்கும் வண்ணம் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றுள்ளது.

movie to mobile new platform launched

இதன் முதல்படியாக மூவி டு மொபைல் (MTM) என்ற பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளிவந்த யாஷிகா ஆனந்த், அசோக், சத்யன், சேஷு, வாவிக்ரம், மாறன், அம்பாணி சங்கர், பயில்வான் ரங்கநாதன், ஆகியோர் நடித்த ரங்கா இயக்கிய, சாரதிராஜா தயாரித்த, திரைப்படம் 'பெஸ்டி' இந்த படம் திரையரங்கில் வெளியான ஒரே வாரத்தில், அதாவது 13.07.2022 அன்று அலைபேசியில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த செயலில் ரசிகர்கள் ரூபாய்.30 மட்டுமே கட்டணமாக கட்டி நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே படத்தை பார்த்து ரசிக்கலாம்.

மேலும் செய்திகள்: மைனா நந்தினியை தொடர்ந்து... புதிய கார் வாங்கிய ஆஜித்! அட இத்தனை லட்சமா?
 

movie to mobile new platform launched

MTM அறிமுதத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், சங்க தலைவர் என். ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சௌந்தரபாண்டியன், என்.விஜயமுரளி, விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன், கில்ட் தலைவர் ஜாகுவார் தங்கம், நடிகர் இமான் அண்ணாச்சி, இதன் தமிழ்நாடு பாண்டிச்சேரி விநியோகஸ்தர் கோவிந்தராஜ், சின்னத்திரை இயக்குனர் சங்க தலைவர் தளபதி, இயக்குனரும் நடிகருமான சி.ரங்கநாதன், தயாரிப்பாளர் தங்கம் சேகர், MTM-இயக்குனர்கள் விஜயசேகரன், தயானந்தன், உட்பட ஏராளமான தயாரிப்பாளர்களும் திரையுலகை  சார்ந்தவர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தினர். மாதம்  தோறும் இரண்டு திரைப்படங்கள் மொபைல் திரையரங்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்... மஞ்சள் நிற பட்டுப்புடவை கட்டி... மல்கோவா மாம்பழம் போல் போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்!!
 

Follow Us:
Download App:
  • android
  • ios