திரைப்படத்தில் வாய்ப்பு கேட்டு சென்றை நடிகைக்கு தயாரிப்பாளர் ஒருவர் முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியில் நடிகர் தனுஷ் நடித்த ராஞ்சனா படம் ரசிகர்களுக்கு நினைவில் இருக்கும். அந்த படத்தில் தனுசின் முறைப் பெண்ணாக ஒருவர் நடித்திருப்பார். அவர் தான் ஸ்வரா பாஸ்கர்.  இந்தி திரையுலகில் மிகவும் துணிச்சலான நடிகை என்று பெயர் பெற்றவர் இவர்.  வீர் தி வெட்டிங், அனார்கலி கா ஆரா உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களில் ஸ்வரா பாஸ்கர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்வரா பாஸ்கர் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது துவக்கத்தில் வாய்ப்புகள் இல்லாமல் நான் சிரமப்பட்டேன்.   அப்போது வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். நடிக்க வாய்ப்பு கொடுத்தால் பதிலுக்கு என்ன கிடைக்கும் என்று தயாரிப்பாளர் என்னிடம் கேள்வி கேட்டார். நான் புன்னகைத்தவாறே அந்த அறையில் இருந்து வெளியேறினேன்.

அப்போது வீட்டு முகவரியை கொடுத்துவிட்டு செல்லுமாறு அந்த தயாரிப்பாளர் என்னிடம் கூறினார். பிறகு சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுப்பதாக அழைத்தார்.   நானும் நம்பி அந்த தயாரிப்பாளரை சந்திக்க சென்றேன். ஆனால் நான் சென்ற போது தயாரிப்பாளர் நிதானத்தில் இல்லை. போதையில் இருந்தார். நிதானம் இழந்திருந்த அவர், என்னை காதலிப்பதாக கூறினார். மேலும் என் அருகில் வந்து என்னை முத்தமிட முயன்றார். நான் நழுவிச் செல்ல முயன்றதால் அவர் வாயில் என் தலைமுடிகள் சிக்கிக் கொண்டன. திரும்பி பார்த்த போது அவர் வாய் முழுவதும் என் முடிகள் இருந்தது. நான் விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். இவ்வாறு ஸ்வரா பாஸ்கர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.