திரைப்பட தயாரிப்பாளர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிபடும் நிலையில் உதவிக்கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். 

திரைப்பட தயாரிப்பாளர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிபடும் நிலையில் உதவிக்கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் விக்ரம், சூர்யா ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் பிதாமகன். இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கியுள்ள நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 2003ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. படம் வெளியான நேரத்தில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரது நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. இத்தகைய திரைப்படத்தின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை தற்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து தனது மருத்துவ செலவுகளை சமாளிப்பதற்காக உதவி கோரி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்ட "கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் ஃபர்ஸ் லுக் !!

கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர் வி.ஏ.துரை, சிகிச்சை பெற பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் சக்கரை நோயின் கடும் பாதிப்புக்குள்ளாகி உடல் மெலிந்து காணப்படுகிறார். இதை அடுத்து தனது மருத்துவ செலவுக்கு உதவி கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். இதை அடுத்து நடிகர் கருணாஸ் ரூ.50 ஆயிரம் பண உதவி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிதாமகன் திரைப்படத்தில் நடிக்க கருணாஸுக்கு தயாரிப்பாளர் துரை ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித்தின் துவங்க இருக்கும் 2-ஆவது சுற்று உலக மோட்டார் சுற்று பயணத்திற்கு.. என்ன பெயர் தெரியுமா?

தற்போது அந்த தொகையை துரையின் மருத்துவ செலவுக்கு கொடுக்கிறேன் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். தயாரிப்பாளர் துரையின் நிலை அறிந்து நடிகர்‌ சூர்யாவும் ரூ.2 லட்சம் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவருக்கு சிகிச்சை அளிக்க நிறைய பணம் தேவைப்படுகிறது என்றும், இதனால் இயன்றவர்கள் முடிந்தவரை உதவ முன்வர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் துரை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வி.ஏ.துரை பிதாமகன் மட்டுமின்றி எவர்கிரீன் மூவீஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி என்னம்மா கண்ணு, லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.