நடிகை என நினைத்து பேயை துரத்திய மொட்டை ராஜேந்திரன்... படக்குழு அதிர்ச்சி..!

பேய் படத்தில் நடித்த மொட்டை ராஜேந்திரன் பேயை துரத்திக்கொண்டு சுடுகாடு வரை ஓடிய சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

எஸ்.ஏ.ஆனந்த் இயக்கி உள்ள காமெடி கலந்த பேய் படம் தான் மோகனா.

இந்த பட கதைப்படி,இறந்த ஒருவரின் ஆவி கல்யாணி நாயரின் உடம்புக்குள் நுழைந்து விடும்.மொட்டை ராஜேந்தர் பண்ணையாளராக  நடித்துள்ளார்

இந்த படத்தில் பவர் ஸ்டாரும் நடிக்கிறார்.கதைக்கு ஏற்றபடி ஒருகாட்சி எடுக்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது

அப்போது கல்யாணி நாயர் மீது ஆசைப்பட்டு அவரை மொட்டை  ராஜேந்திரன் துரத்தி செல்ல வேண்டும் என்பது தான் காட்சி

மொட்டை ராஜேந்தர்,கல்யாணி நாயரை துரத்தி உள்ளார்...கொஞ்ச தூரம் நிற்காமல் போகவே பின்னாடியே ஓடி உள்ளார் மொட்டை ராஜெந்திரன்....பிறகு தான் அவருக்கு தெரியவந்துள்ளது அது சுடுகாடு என....

கல்யாணி நாயர் என நினைத்து ஓடி வந்த மொட்டை ராஜேந்தருக்கு பேரதிர்ச்சி தான் மிச்சம்.....

காரணம் அந்த நேரத்தில்,கல்யாணி நாயர் படக்குழுவினருடன் இருந்துள்ளார்.அதே போன்று, கால்யாணி நாயர் உடம்புக்குள் ஒரு  இறந்து போன பெண்ணின் ஆவி நுழைந்து பவர் ஸ்டாரையும் மிரட்டி  உள்ளதாக கூறப்படுகிறது

இதன் காரணமாக படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.