தான் முதன்முதலாக இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’படத்துக்கு விளம்பரம் தேவைப்படுவதால் பிரபல நடிகரும் ஆர்.ஜே.வுமான பாலாஜி மக்கள் காதில் பூ சுற்றும்  வேலையில் இறங்கியிருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘இதுவரைக்கும் சமூகப் போராளியா இருந்தவரு டைரக்டர் ஆனவுடன் எவ்வளவு மட்டமா இறங்கிட்டாருன்னு பாருங்க’என்று சமூக வலைதளங்களில் கிண்டல்கள் குவிகின்றன.

காலகாலமாக பக்திப்படங்களுக்குத் தரப்படும் டெம்ப்ளேட்டான விளம்பரம் என்பது படக்குழுவினர் அனைவரும் விரதம் இருக்கின்றனர் என்பது. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய்ப் பார்த்தால் மட்டனும் சிக்கனும் சரக்குமாய் ஓடும் விரதங்களின் வண்டவாளங்கள் தெரியும். தற்போது அதே வழியில் தனது பக்திப்படத்துக்கு விளம்பரம் தேடும் ஆர்.ஜே.பாலாஜி,’ஷூட்டிங் முடியும் வரை யாரும் அசைவம் சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். படக்குழு சைவத்துக்கு மாறிவிட்டது. நயன்தாராவும் சைவத்துக்கு மாறி விரதம் இருக்க உள்ளார். இந்த படத்தில் சமூகத்திற்கு தேவையான மெசேஜ் இருக்கிறது. கன்னியாகுமரி அம்மனுக்கு, மூக்குத்தி அம்மன் என்ற பெயர் உண்டு. அதையே படத்துக்கு வைத்திருக்கிறேன். நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்திருப்பதால் அதிக ரசிகர்களை படம் சென்றடையும்’என்று கதை விட்டிருக்கிறார்.

இதுகுறித்து கமெண்ட் அடித்த படக்குழுவினர், தான் சைவம் சாப்பிடுபவர் என்பதால் பாலாஜி படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் சைவம் சாப்பிடத்தான் வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இவர் சொல்வது போல் நயன்தாரா அவ்வளவு லேசில் சைவத்துக்கு மாறக்கூடியவர் அல்ல என்பது அவரை வைத்துப் படம் எடுத்த அனைவருக்கும் தெரியும் என்கின்றனர்.