BiggBoss Ultimate : பணத்தை வைத்து ஆசை காட்டும் பிக்பாஸ்... பெட்டியை தூக்கியது இவரா? - வெளியான ஷாக்கிங் வீடியோ
BiggBoss Ultimate : பிக்பாஸில் இதுவரை நடந்த 5 சீசன்களில் 3 முறை மட்டுமே போட்டியாளர்கள் பணத்தை எடுத்துள்ளனர். மூன்றாவது சீசனில் கவினும், நான்காவது சீசனில் கேபியும், ஐந்தாவது சீசனில் சிபியும் இந்த பணப்பெட்டியை எடுத்தனர்.
ஓடிடி பிக்பாஸ்
ஓடிடி-க்கென பிரத்யேகமாக நடத்தப்படும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 50 நாட்களைக் கடந்து இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் இந்நிகழ்ச்சியில், தற்போது பாலா, நிரூப், சுருதி, தாமரைச் செல்வி, ஜூலி, ரம்யா பாண்டியன், அபிராமி ஆகிய 7 போட்டியாளர்கள் உள்ளனர்.
70 நாட்கள் மட்டுமே
வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடத்தப்படும். ஆனால் இந்நிகழ்ச்சி 70 நாட்கள் மட்டுமே நடத்தப்பட உள்ளது. இதில் ஏற்கனவே 58 நாட்கள் கடந்து விட்டதால், இன்னும் 2 வாரங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. இதில் இறுதிபோட்டிக்கு முன்னேறப்போகும் போட்டியாளர் யார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
மணி டாஸ்க்
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது மணி டாஸ்க் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக குறிப்பிட்ட தொகையுடன் பணப்பெட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படும். அந்த தொகை நேரம் செல்ல செல்ல ஏறிக்கொண்டே போகும். அதனை எடுக்கும் போட்டியாளர் அந்த தொகையுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்படுவார். இதுவரை நடந்த 5 சீசன்களில் 3 முறை மட்டுமே போட்டியாளர்கள் பணத்தை எடுத்துள்ளனர். மூன்றாவது சீசனில் கவினும், நான்காவது சீசனில் கேபியும், ஐந்தாவது சீசனில் சிபியும் இந்த பணப்பெட்டியை எடுத்தனர்.
பணப்பெட்டியை எடுத்தாரா நிரூப்?
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் மணி டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் 3 லட்சம் ரூபாய் பணத்துடன் கூடிய பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனை நிரூப் எடுப்பது போன்ற காட்சிகள் புரமோவில் வெளியாகின. ஆனால் அவர் பணப்பெட்டியை எடுக்க வில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை ரூ.8 லட்சம் வரை தொகை உயர்த்தப்பட்டும் யாரும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... JBaby Movie : ‘ஜெ.பேபி’யா தலைப்பே வில்லங்கமா இருக்கே.... அடுத்த சம்பவத்திற்கு தயாராகிறாரா பா.இரஞ்சித்?