கடந்த 2018 ஆம் ஆண்டு, நடிகை அமீஷா பட்டேல் அஜய்குமார் சிங் என்பவரிடம், படம் தயாரிப்பதற்காக ரூ. 2 . 5 கோடி, கடன் வாங்கி இருந்தார்.  ஆனால் இந்த படம் இதுவரை வெளியாகாததால் வாங்கிய கடன் பணத்தை அமிஷா படேல் கொடுக்கவில்லை.

அஜய்குமார் சிங் தொடர்ந்து நடிகை அமீஷா பட்டேலிடம் தான் கொடுத்த 2 . 5  கோடி பணத்தை வட்டியுடன் சேர்த்து கேட்டுள்ளார்.

இதனால் நடிகை அமீஷா பட்டேல் ரூ.3 கோடிக்கு அஜய்குமார் சிங்கிற்கு செக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த செக் பவுன்ஸ் ஆகியதால் அதிர்ச்சி அடைந்தார் அஜய்குமார் சிங். மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்க அமீஷா பட்டேல் இடமிருந்து இதற்கு உரிய பதில் எதுவும் கொடுக்கவில்லை.  மேலும் நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை அமிஷா பட்டேலுக்கு  பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  நடிகை அமீஷா பட்டேல் விஜய் நடித்த புதிய கீதை படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.